Monday, November 23, 2009

சுவாசம் மறந்து.......

சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் அறிந்திட முடியாத அளவுக்கு அவளென்ன சின்னக் குழந்தையா? கடந்த இரு வருடங்களுக்கு முதல் தானே இருபத்தி ஆ;று வயதை எட்டியிருந்தாள்.

உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறி போனதா?

அல்லது

அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா?

எப்படியோ தன் பிடிவாதத்தால்; தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும் போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது போல உணர்வாள்!!

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

தாயிருந்தும்; தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தான் தாயாயிருந்து குடும்பத்தைப் பார்த்தாள்.அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்;து மூன்று வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வந்தாள்.

அவளும் பெண் தானே?
வாழ்க்கை குறித்து அவளுக்கும் கனவுகள் இருக்கத் தான் செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள்.எல்லோரும் வீடு ரொக்கமாகப்பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாருமிருக்கவில்லை. ஆனால் காலம் பொறுத்திருப்போருக்கு வெகுமதியை காட்டாமல் விடுவதில்லையே?


ஆம்!
வந்தான் அவன். நரேன்.

அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலத்தான் அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.


அவனுக்குள்ளும் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆம் ஷீலா. ஆனால் இன்று நேற்றல்ல. நான்கு வருடங்கள்.

அந்த ஷீலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லைதான். அவனையே தன் சுவாசம் என்றவள்...அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக் கொண்டு போனாள்.
சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டியவாறு அவன் அவளது நினைவுகளுடன் மட்டும் தூங்கிப் போக பழகி விட்டிருந்தான்.
மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டு;ம் மீண்டு வந்து அவனை தொல்லைப் படுத்தின.

அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான்.

ம்ம் அவனும் கவிதை எழுதத் தொடங்கினான்.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை.ஆகவே உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன.

சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான். எத்தனை முறை தான் அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனை வேண்டும் என்றது.எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக் கொண்டது.

~~நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே?||

சாருவின் மடியில் தலை வைத்து அவன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் வார்த்தைகள் அவை. ஏற்கனவே ஷீலாவின் மூலம் ஏமாற்றத்pன் வலி கண்டிருந்தவன் தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான்.
இப்படியே இருந்தவர்களுக்கு யார் கண் பட்டதோ, பேரிடியாய் வந்து வாய்த்தான் சாரு தன் நண்பன் என்று அறிமுகப் படுத்தியிருந்த சுதன்.

சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காதது பற்றி அவனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்கு கூட தகுதியில்லாத போது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான். அவனது நடவடிக்கை பற்றியும் அவனைப் பற்றியும் நரேன் கூறுகையில் தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் அவனது அன்புக்கு பிறகு தான் உன் காதல் என்பாள். நட்பு தான் வாழ்க்கை என்று அடம் பிடிப்பாள்.அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு அவன் வேண்டப்படாதவன் ஆகி விட்டான்.

~நட்பு படலை வரைக்கும்| என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்கு போனதில்லை. இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படித்த அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் எல்லாம் சுதனும் இருப்பதாக கூறி சாரு வைத்து விடுவாள். இரவு பத்தரை மணி வரை அவன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை. சந்தேகம சந்தோஷத்தை தின்று போடும் என்று சும்மாயிருந்தான்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும் படி தான் அந்த மிரட்டல் அமைந்திருந்தது.தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத் தான் கோபம் வராது. என்றாலும் பொறுத்தான்.ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை.

ஒரு நாள் அலுவலகம் விட்டு பைக்கில வந்து கொண்டிருந்தவன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள்.

இவனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள். நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. தான் சாருவிடம் சொல்லாமல் விடுவது தான் பிற்காலத்தில் எமனாய் அமையும் என்று எண்ணியிருக்க மாட்டான் தானே?

இவன் ஏன் சுதனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறான் என்று சாருவும் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் பாழாய் போன நட்பு அவள் கண்ணை மறைத்தது.வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விடவுமா வழித்துணையாய் வரும் சுதன் பெரிது????

நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன்.எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்து தீர்த்தாள்.

இப்படியிருக்க விதியும் விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாரா விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது போலிருந்தது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். ~அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான் தான|; என சாருவின் முன்னலேயே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான்.

காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன் வந்து பேய்க்காட்டிச் சிரித்தன. பெண்ணெல்லாம் பேய் என்று பாடத் தொடங்கினான் நரேன். அறிவுள்ளவன் என்றால் அந்த ஷீலா ஏமாற்றிப் போட்ட போதே திருந்தியிருக்க வேண்டுமே.ஆனால் அன்பு அன்பு என்று அலைந்து இறுதியில் நெஞ்சில் அம்பை வாங்கிக் கொள்ளும் நரேன் போல் எத்தனைப் பேர்????

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேனைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். இன்னும் என்னெனவோ சொன்னாள்;. விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா. உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றி விட்டதையும் கூறினாள்.புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறை தானும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது.

ம்ம்!!
இனியென்ன எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணிய போது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது.

சுவாசம் மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொனறை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!!

‘’’’’’’’

No comments:

Post a Comment