Monday, November 23, 2009

சிட்டுக்குருவியின் சிறகுயர்த்தி....

ரவீனா உயர் தரத்துக்கு தெரிவாகியிருந்த போது தான் தூர கிராமத்துலிருந்து இங்கு படிப்பதற்காக வந்திருந்தாள் ஷியாமளா. வந்த புதிதில் யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. தானும் தன் படிப்பும் என்றிருப்பாள். பாடசாலை இடைவேளை நேரத்தில் கூட யாருடனும் கலந்து கொள்வதில்லை. இவளுடைய இந்தப் போக்கு ரவீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே அவளே வழிய சென்று பேச்சு கொடுத்தாள்.

ஷியாமளாவுக்கும் பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய பாடசாலைக்குப் போனால் அங்குள்ளவர்கள் முதலில் கதைத்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை ரவீனாவின் நட்பில் உணர்ந்தாள் ஷியாமளா. ஒவ்வொரு நாளும் சோகத்துடனேயே பாடசாலைக்கு வருவதில் உள்ள கஷ்டத்தை ஷியாமளா சொல்லாமலேயே ரவீனா புரிந்து கொண்டாள். இல்லையில்லை ஷியாவின் முகவாட்டம் காட்டிக் கொடுத்து விடும்.

~~ ஏன் ஷியா இங்க உங்கட சொந்தக்காரங்க யாரும் இல்லயா?||

அவள் பிரிதொரு விடுதியிலிருந்து தான் பாடசாலைக்கு வருவதாய் ரவீனா எண்ணிக் கொண்டாள் போலும்.

அவள் அப்படிக் கேட்டதும் ஷியாமளா விழித்தாள். விடை சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவளது மௌனம் யாரும் இல்லை என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அல்லது இருப்பவர்கள் பெரிய வசதிக்காரராய் இருந்து இவள் அங்கே தங்குவது பிடிக்காதவர்களாயிருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டாள் ரவீனா.

இது ஷியாவுக்கு உள்ளுர வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஷியாவின் பெரியம்மா மகள் ஒருவர் பிரபலமான பாடசாலை ஒன்றில் தழிம் மொழி விசேட ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பாடசாலையில் அவருக்கு செல்வாக்கு அதிகம் என்றும் அபி டீச்சர் என்றால் எல்லோருக்கும் பெரும் விருப்பம் என்றும் அடிக்கடி அந்த அபி டீச்சரே சொல்லித்தான் இவர்களுக்குத் தெரியும். எனவே ஷியாவை எப்படியாவது அந்த பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்க பேரவா கொண்டார்கள் ஷியாவின்; பெற்றோர்.

தன் அக்காவின் மகள் தன் மகளான ஷியாவுக்கு பக்கபலமாக நின்று உதவுவாள் என்று தான் ஷியாவின் அம்மா நப்பாசை கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அபி டீச்சரும் அப்படித்தானே சொல்லியிருந்தார்.

தங்கள் வீட்டில் வந்து ஷியாவை தங்கியிருக்குமாறும் டியூஷன் க்ளாஸ் தேடித்தருவதாயும் எத்தனை பித்தலாட்டங்கள்??

ஆயிரம் கனவுகளை சுமந்துத்த் தான் பறந்து வந்தது ஷியா எனும் சின்னச் சிட்டு. ஆனால் மாதம் ஒன்று செல்லு முன்பே அதன் சிறகுகள் அறுக்கப்பட்டது. படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாய் மூடி மௌனம் காத்தாள் ஷியா. அம்மா அப்பாவின் ஆசை படி நன்றாக படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே அவள் மனதில் படிந்திருந்தது. கிராமத்து பாடசாலையில் இருந்த உயிர் தோழிகளை மறந்தது பசி தாகம் பாராமல் பொறுமையாக இருந்தது லட்சியங்களை நனவாக்கிக் கொள்ளத்தானே.

ஆனால் அந்த அபி டீச்சருக்கு பாடசாலையில் தான் செல்வாக்கு இருந்ததே ஒழிய சொல்வாக்கில் அவர் தவறியராகவே இருந்தார்.

தெரியாத தேசத்தில் விடுதி தேடிப்போகுமாறு அடிக்கடி ஷியாவுக்கு சொல்லப்பட்டது. தன் பிள்ளைக்கு சுகமில்லை என்றால் முழு குற்றமும் வசையும் ஷியா மேல் படிந்தது. ஒரு வேளை ஷியா அங்கு செல்லாமல் இருந்திருந்தால் பிள்ளைகளுக்கு தடிமனேனும் வந்திருக்காதோ என்னவோ??

ஊரிலிருந்து அம்மா கோல் பண்ணுகையில் எல்லாம் தொண்டை அடைக்கும். அழுகை முட்டும். சிரிக்கவே தோன்றாது. அப்பா தம்பியுடனும் கொஞ்சமாக பேசி விட்டு வைத்து விடுவாள். பிறகு தலையணை நனையும்.

தன் அக்காவுடன் மாத்திரம் கொஞ்சம் கூடுதலாக ஒட்டுவதுண்டு. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஷியாவுக்கு காதல் மனு போட்டதையெல்லாம் கூறுமளவுக்கு நெருக்கமாகப் பழகினார்கள் அவர்கள். ஆனால் இப்போது அருகில் அக்காவும் இருக்கவில்லை. ஓரிரு முறை தான் கொழும்பிலிருந்து கோல் பண்ணி பேசினார். அப்போதும் கூட தன் பிரச்சனைகளை கூறவில்லை ஷியா. கூறவில்லை என்பதை விட கூறும் வாய்ப்பு இருக்கவில்லை என்பதே மிகப் பெருத்தம். முதன்முதலாக தான் சந்தோஷமாக இருப்பதாயும் படிப்பதாயும் அக்காவிடம் பொய் சொன்னது பற்றி கவலை இல்லாமல் இருந்திருக்காது.

இன்றைய காலத்தில் கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளது. வறுமைப்பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். விருப்பம் மட்டும் இருந்தூல் போதுமா? கல்வி மனதில் பதிவதற்காக என்றொரு சூழல் வேண்டுமே. அது கிடைக்காத போது படி படி என்று சொல்லுவதிரும் அர்த்தங்கள் இருப்பதாய் தோன்றவில்லை.

ஏய் என்ன யோசிக்கிற என்று அவளைப்பிடித்து உலுக்கிய போது தான் சிந்தை கலைந்தாள் ஷியா.


~~எங்களுக்கு பெரிய வீடு இருக்கு. 3 பேர் இருக்கோம். டாடி பிஸ்னஸ் போனால் ஒரு மாசம் கழிச்சி தான் வருவாரு. மம்மி கிட்ட சொல்லிட்டா நீயும் வந்து தங்கிக்கலாம். என்ன வர்ரியா?||

ஷியாவுக்கும் உண்மையில் வேறெங்காவது போனால் நன்றாக இருக்கும் போல் தான் தோன்றியது. அதனால் அபி டீச்சருக்கு இந்த விடயம் பற்றி சொன்ன போது எப்படி சந்தோஷமாக இருந்திருக்கும். உடனே தன் சித்திக்கு அதாவது ஷியாவின் அம்மாவுக்கு தொலைபேசினார்.

தன் மகள் படிக்கிறாள் என்று எண்ணியிருந்த பெற்றோருக்கு இந்த செய்தி உண்மையை உணரச் செய்தது. ஷியா அங்கே படித்தது மட்டுமில்லை. துடித்தும் போயிருக்கிறாள் என்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு இடத்தில் விட்டுவிட்டு இருக்க அவர்கள் சங்கடப்பட்டதை யாருக்கு சொல்லுவார்கள்? கெட்டு சீரழிகிறார்கள் என்றால் வீட்டுக்குள் பொத்தி வைத்து பாதுகாக்கலாம். ஆனால் அவர்களும் தத்தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்காகத் தானே தம்மை விட்டு பிரிந்திருக்கிறார்கள் என்று தமக்குள்ளேயே சமாதானம் செய்து கொண்டு ஆசைகளை சமாதியாக்கிக் கொள்வார்கள்.

இப்போது ஷியா தன் தோழி ரவீனாவுடன் மிகவும் சந்தோஷமாயிருப்பதாய் ரவீனாவின் தாய் ஷியாவின் அம்மாவுக்கு தொலை பண்ணிக் கூறுவார். இரத்த பந்தத்தை விட இந்த உறவுகள் வலிமை கூடியது. சிறகொடிக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி ஷியாவின ;ஆசைகள்; மீண்டும் சிறகடிக்க தொடங்கி விட்டன. இனியென்ன.... அவளும் ரவீனாவும் சேர்ந்து நன்றாக படித்து புது உலகொன்றை உருவாக்குவார்கள். பார்த்திருப்போம்.

(சம்பவம் மட்டும் உண்மை)

என்னை அறிந்த போது.......

~~கவின் டீயை குடிப்பா........||

தயாள் அண்ணா என்னை எழுப்பிய போது தான் நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணி ஆறைத் தாண்டும் முன் என்னை எழுப்பினால் தான் நேரத்துக்கு வேலைக்கு போகலாம் என்பது அவருக்குத் தெரியும். ஏனெனில் கொஞ்சம் சுணங்கினாலும் எங்கள் மேலதிகாரி வசிட்டராகி விடுவார். ஏதோ என்னுடைய செலவுகளை கொஞ்சமாவது சமாளித்துக் கொள்ளவும் ஆத்திர அவசரமென்றால் லீவு போட்டு விட்டு போவதற்கும் கொஞ்சமாவது சுதந்திரம் உண்டு. அதனால் தான் வேறு வேலைகளுக்கு போக நினைத்தாலும் இவற்றை நினைத்து மௌனியாகி விடுவேன்.

தயாள் அண்ணா ஊற்றித் தந்த தேனீரை வைத்துக் கொண்டு மிக்ஷர், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முடிந்து போயிருந்தது. வீட்டில் என்றால் அப்பா ஏதாவது வாங்கி வைத்திருப்பார். எப்படியோ எனக்கென்றால் யோகட் ஆப்பிள் இப்படி ஏதாவது சாப்பிடுவது பிடிக்கும்.

என்றாலும் நான் வீண் செலவுகளை செய்வதில்லை என்ற படியால் நான் எதைக் கேட்டாலும் வசதி இருந்தால் தயாள் அண்ணா வாங்கித் தராமல் இருக்க மாட்டார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றும் ஒரு நாள் அப்படித்தான். நான் ஏ.எல் செய்து கொண்டிருந்த காலமது. அவசரத்தில் சீசன் டிக்கட்டை எடுக்காமல் போய் விட்டேன். எனவே மீண்டும் வீட்டுக்கு போய் அப்பாவிடம் காசு இருபது ரூபாயும் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு வந்து கொண்டிருந்தேன். வீட்டு வாசலை நெருங்கும் போது

~அண்ணனைப் பாரு எப்பவாச்சும் காசு கேட்கிறானா... நீயும் வந்து வாச்சிருக்கியே...||

என்று தம்பிக்கு அப்பா அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.

நான் வந்த சுவடு கூட தெரியாமல் நழுவிப் போய் விட்டேன்.

எனக்கொன்றும் பெரிய்ய்ய்ய வயதில்லை. பதமான 21 வயசு தான் ஆகிறது. பிரத்தியேகமாக ஏதாவது ஒரு பாடநெறியை நிறைவு செய்யத்தான் நான் இந்த தலை நகரத்துக்கு வந்திருப்பதாக பலரும் நினைத்தலும் தயாள் அண்ணா இருக்கும் தைரியத்தில் தான் அம்மா என்னை இங்கு அனுப்பியுள்ளார் என்று அவர்களுக்குத் தெரியாது.

ஆம் தயாள் அண்ணா இப்போது என் இலக்கிய நண்பன் மட்டுமல்ல. அறை நண்பனும் தான். அவர் தற்போது தனியார் கம்பனியொன்றில் அக்கவுண்டனாக பணி புரிகிறார். அவருக்கு எப்படியோ.. ஆனால் அவருக்கொன்று என்றால் என்னால் தாங்க முடியாது. இவ்வளவு நெருக்கம் நமக்குள் வரக் காரணம் சர்வ சத்தியமாய் இலக்கியம் தான்!!

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒஒ

கவின் என்ன எழுதுகிறாய்?| என்று என் பாடசாலை நண்பனொருவன் கேட்ட போது நான் எழுதியிருந்தததை அவனிடம் கொடுத்தேன். அது பாடல் வரிகளையும் உள்ளடக்கிய எனது கற்பனை தான். அதற்கு சிறியதொரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. மாறாக அவன் மற்றவர்களுக்கும் அதைக்காட்டி என்னை ஏளனம் செய்தான்.; (தற்போது என் கவிதைகளை பத்;திரிகைகளில் பார்ப்பதும் அவனுடைய நண்பர்களிடம் இந்த கவிஞனுடைய நண்பன் தான் நான் என என் பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வேறு கதை). எனினும் நான் என் முயற்சிகளை நிறுத்தவில்லை. சில நாட்களில் என் வரிகளை பார்த்து விட்டு வைரமுத்துவின் வரிகளை உழில பண்ணியிருக்கிறான் என்பார்கள். அப்போதெல்லாம் ஆஹா அந்தளவிற்கு நன்றாகயிருக்கிறதா என்று மனசுக்குள் சிரித்துக்; கொள்வேன்.

நான் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவன் என்று அம்மாவும் கூறுவார.; தரம் மூன்றிலிருந்த போதே அம்மா பல கதைப் புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிறார். தரம் ஆறு வரைக்கும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை அடிக்கடி பாடசாலை மாற்றியதால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுத்து செயலிழக்கச செய்தது. இப்படி நாம் ஊர் விட்டு ஊர் செல்லக் காரணம் அம்மாவின் இடமாற்றம் என்பதை விட எங்கள் அப்பாவின் சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதம் தான் என்று பின்னாட்களில் அறிந்தேன்.

என் சிறு வயது பராயத்தில் எல்லாம் முதல் ஐந்து நிலைகளுக்குள் வந்த நான் மற்ற பாடசாலைகளில் ஒன்பதுக்கும் பிற்பட்ட ஸ்தானத்துக்கு வந்த போது முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறேன். அம்மாவைத் தவிர அனைவரும் என்னை குறைத்து மதிப்பிடும் போதெல்லாம் எனக்கென்று அன்பு காட்ட யாராவது இருந்தால்..... என்றெண்ணியெல்லாம் உள்ளுக்குள் மருகியிருக்கிறேன். ம்ம் அந்த கனவை எல்லாம் நனவாக்கத் தான் நானிருக்கிறேன் என்று தயாள் அண்ணா எனக்கு சொல்வது போல் இப்போது உணர்வதுண்டு.
ஏதோ வாழ்க்கையை கடந்து கொண்டிருந்த போது தான் என் வகுப்பு நண்பர்களுக்கும் உயர் வகுப்பு அண்ணா மார்களுக்கும் இடையில் பாடசாலையில் சண்டை நடந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமும் சம்பந்தப்படாத நானும் அம்மாவின் முன்னாலேயே அதிபரால் தண்டிக்கப்பட்ட போது வாழ்க்கை மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று. அம்மாவின் முகம் பார்க்க முடியாதளவுக்கு வேதனையாயிருந்தது. அதற்கான காரண கர்த்தாக்கள் சில ஆசிரியர்களும் தான் என்ற போது அதிர்ச்சியடைந்தேன். தன் முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் என்றும் அவர்கள் உதட்டில் தேனும் நெஞ்சில் விஷமுடனும் பேசுபவர்கள் என்றும் சொல்லி அம்மா என்னை தேற்றினார்.

எப்படியோ புதிய பாடசாலையில் இருந்த மூன்று வருடங்களும் படிக்க முடியாதவர்களுடன் தான் நட்பு கொள்ள முடிந்தது. கெட்டிக்காரப் பிள்ளைகள் ஒரு ஆசிரியையின் மகன் என்று கூட எண்ணாமல் என்னை ஒதுக்கியது ரொம்பவும் வருத்தமாயிருந்தது. பிறகு நான் சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகியிருந்ததால் என் சுட்டித் தனங்கள் யாவும் தற்காலிகமாக விடை பெற்றோடின. பின்னே? என் குடும்பத்தார் யாவரும் படித்து பெரியவர்களாயிருக்கும் போது நான் மட்டும் இப்படியே இருப்பதா என்ற சவாலுடன் பரீட்சைக்கு என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் என் தலையெழுத்தில் சீர்குலைவு ஏற்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில்; என் அம்மாவின் ஆப்பரேஷன் நடந்தது. அதனால் மிகவும் நொந்து போயிருந்தேன். என் தந்தையின் வருமானத்திலும் முன்னேற்றங்கள் இருக்கவில்லை. பாவம் அவரும் தான் என்ன செய்வார்? மிகவும் உருக்குலைந்து யாரோ போல் ஆகியிருந்தார்....இந்த நேரம் பார்த்து தான் அந்த சந்தோஷமானதும் சங்கடமானதுமான செய்தியை என் சின்னம்மா என்னிடம் கூறினார்.
ஆம்! அம்மா வைத்தியசாலையில் இருக்கும் நேரம் பார்த்து என் தங்கை பருவமடைந்திருந்தாள். மூளை கசங்கிப் போனது. சுயமாக எதையும் சிந்திக்கும் அவகாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவாறு மற்ற அனைத்து அத்தை பெரியம்மா மாருக்கும் சாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினேன்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒஒ

என் இளமையின் நான்கில் ஒரு பகுதி அவ்வாறு கழிந்தது. இதற்கிடையில்நான் உயர்தரத்துக்கும் தெரிவாகியிருந்ததுடன் அறநெறி பாடசாலையில் ஆசிரியனாக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்;. இடைப்பட்ட இந்த காலத்தில் தான் என் வாழ்வின் திருப்புமுனை ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மனதில் தோன்றிய அத்தனையையும் கவிதைகளாக மொழி பெயர்த்தேன். அவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புமாறு அம்மா தான் சொன்னார். நன்றாய் இருந்திருக்க வேண்டும். மாதமொன்று செல்லு முன்பே பிரசுரமாகியிருந்தது.

எத்தனை மகிழ்ச்சி!!!

எத்தனை கூச்சல்!!
இதையெல்லாம் காட்டிய பின்பு ~ இங்க பாருடா கழுதை கவிதை எழுதுது| என்று என்னை கேவலப் படுத்திய நண்பன,; தன் காதலிக்கு கொடுப்பததற்காக என்னிடம் கவிதை எழுதி கேட்கத் தொடங்கினான். நான் பெருமை பட்டுக் கொள்ளவில்லை. அவன் தான் அசடு வழிந்தான். எனினும் மென்மேலும் என் திறமையை வளர்க்கும் முயற்சிக்கு உத்தரவாதங்கள் இருக்கவில்லை. எப்படி எழுதுவது எதில் எழுதுவது என்று தெரியாமல் அவஸ்தை பட்டிருக்கிறேன்.அப்படியிருக்;கையில் தான் ~கவின் உனக்கொரு கடிம் வந்திருக்கு| என்று அம்மா தந்து விட்டுப் போனார்.
முக்கியமானதொரு விடயத்தைக் கூற மறந்து விட்டேன். உயர்தர வகுப்பில் இருந்த காலத்தில் சின்னதாய் ஒரு காதல் அரும்பியது. ஆனால் அவளுக்கு அப்படியிருந்திருக்காது. என்னைப் பார்த்து ஒரு நாளாவது வெட்கப் பட்டதில்லை. நகம் கடித்ததுமில்லை.....நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டதுமில்லை. எதுவுமில்லை. எனவே நட்பு ரீதியாகவேனும் கடிதம் போடுவதென்றால் எனக்கு அவளைத் தவிர யாரும் இருக்கவில்லை.

அவளே இல்லை என்று ஆன பிறகு....இப்போது யாராக இருக்கும்?? என்று கலவரமடைந்தேன்.கடிதத்தை வாசிக்க வாசிக்க கலக்கமும் சந்தோஷமும் ஒன்றாக உற்பத்தியானது. சாராம்சம் இது தான்.

நான் தயாள். எழுத்தாளன்.உங்கள் கவிதைகளின் தரம் பற்றி என் நண்பன் கூற கேட்டேன். கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தொடர்பு கொள்க- தயாள்
ஓரிரு மாதங்களுக்குள் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமா? அல்லது வேறு யாருடைய கவிதை வரிகளாவது தெரியாமல் என் கவிதைகளில் உள்ளடக்கப் பட்டு விட்டதா என்ற பயம் என்னை தின்றது. தயங்கிய படியே ~கோல்| பண்ணிய போது தான் தயாள் அண்ணா மிக அன்புடன் கதைத்தார்.
என் கவிதைகள் பற்றி சிலாகித்து பேசினார். நன்றாக எழுதுவதாக சொன்னார். என் நண்பர்களுடன் அவரை ஒப்பிட்டு வியந்தேன். விளையாட்டாக நான் அவரை போஸ்ட்காட் தயாளன் எனும் போது வஞ்சகமில்லாமல் சிரித்து அதை ரசிப்பார்.

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒஒ

நாட்கள் செல்லச் செல்ல நானும் தயாள் அண்ணாவும் மரியாதை எனும் போர்வையிலிருந்து விலகி அன்பென்ற பந்தலுக்குள் இணைந்து கொண்டோம். நீண்ட ஒரு விடுமுறையின் போது தயாள் அண்ணா எங்கள் வீட்டுககு வந்து தங்கியிருந்த போது தான் இலக்கியத்தின் சுவை உணர்ந்து அதையே மூச்சாக எண்ணி செயல் பட்டேன் நான்.

இதைப் பார்த்து இலக்கியம் சோறு போடுமா என்று என்னை பரிகசித்தவர்களும் இருக்கிறார்கள். எனினும் என் இலக்கிய வேட்கைக்கு நல்ல பதிலை தயாள் அண்ணா தந்து கொண்டிருந்தார். அவர் தலை நகரில் வீடெடுத்தவுடனேயே என்னையும் அழைத்துக் கொண்டார். இங்கு வந்த பிறகு தான் நான் புதிய உலகமொன்றை கண்டு கொண்டேன். இலக்கியத்தின் நுணுக்கங்களை கற்றுத் தந்தார். என சிறுசிறு குறைகளை சீர் படுத்தினார் எதிர்மாறான எண்ணங்களிலும் பல சிக்கல்களிலும் துவண்டிருந்த என்னை உற்சாகப் படுத்தினார். ~ என் நண்பன் துணிச்சல் காரன்| என்று சொல்லி என்னை பாராட்டினார்.

தலை நகரில் நடக்கின்ற பல இலக்கிய விழாக்களையும் நான் தரிசிக்கக் காரணம் தயாள் அண்ணா தான். பிரபலமான எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் என்னுடனும் பேசும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா?? என் குடும்பத்தார் கூட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களே.

தற்போது என் படைப்பும் நூலுரு பெறப் போகிறது. முழுக்காரணமுமு; என் தயாள் அண்ணா தான். அவருடைய மேலீடு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. நான் அவரை மிக மதிக்கிறேன். நேசிக்கிறேன். ஆம் ! அவர் தான் இப்போது என் குரு! உலகம் எல்லாமே!!!

(பெயர்கள் மட்டும் கற்பனை)

சுவாசம் மறந்து.......

சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் அறிந்திட முடியாத அளவுக்கு அவளென்ன சின்னக் குழந்தையா? கடந்த இரு வருடங்களுக்கு முதல் தானே இருபத்தி ஆ;று வயதை எட்டியிருந்தாள்.

உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறி போனதா?

அல்லது

அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா?

எப்படியோ தன் பிடிவாதத்தால்; தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும் போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது போல உணர்வாள்!!

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

தாயிருந்தும்; தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தான் தாயாயிருந்து குடும்பத்தைப் பார்த்தாள்.அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்;து மூன்று வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வந்தாள்.

அவளும் பெண் தானே?
வாழ்க்கை குறித்து அவளுக்கும் கனவுகள் இருக்கத் தான் செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள்.எல்லோரும் வீடு ரொக்கமாகப்பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாருமிருக்கவில்லை. ஆனால் காலம் பொறுத்திருப்போருக்கு வெகுமதியை காட்டாமல் விடுவதில்லையே?


ஆம்!
வந்தான் அவன். நரேன்.

அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலத்தான் அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.


அவனுக்குள்ளும் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆம் ஷீலா. ஆனால் இன்று நேற்றல்ல. நான்கு வருடங்கள்.

அந்த ஷீலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லைதான். அவனையே தன் சுவாசம் என்றவள்...அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக் கொண்டு போனாள்.
சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டியவாறு அவன் அவளது நினைவுகளுடன் மட்டும் தூங்கிப் போக பழகி விட்டிருந்தான்.
மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டு;ம் மீண்டு வந்து அவனை தொல்லைப் படுத்தின.

அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான்.

ம்ம் அவனும் கவிதை எழுதத் தொடங்கினான்.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை.ஆகவே உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன.

சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான். எத்தனை முறை தான் அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனை வேண்டும் என்றது.எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக் கொண்டது.

~~நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே?||

சாருவின் மடியில் தலை வைத்து அவன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் வார்த்தைகள் அவை. ஏற்கனவே ஷீலாவின் மூலம் ஏமாற்றத்pன் வலி கண்டிருந்தவன் தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான்.
இப்படியே இருந்தவர்களுக்கு யார் கண் பட்டதோ, பேரிடியாய் வந்து வாய்த்தான் சாரு தன் நண்பன் என்று அறிமுகப் படுத்தியிருந்த சுதன்.

சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காதது பற்றி அவனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்கு கூட தகுதியில்லாத போது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான். அவனது நடவடிக்கை பற்றியும் அவனைப் பற்றியும் நரேன் கூறுகையில் தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் அவனது அன்புக்கு பிறகு தான் உன் காதல் என்பாள். நட்பு தான் வாழ்க்கை என்று அடம் பிடிப்பாள்.அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு அவன் வேண்டப்படாதவன் ஆகி விட்டான்.

~நட்பு படலை வரைக்கும்| என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்கு போனதில்லை. இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படித்த அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் எல்லாம் சுதனும் இருப்பதாக கூறி சாரு வைத்து விடுவாள். இரவு பத்தரை மணி வரை அவன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை. சந்தேகம சந்தோஷத்தை தின்று போடும் என்று சும்மாயிருந்தான்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும் படி தான் அந்த மிரட்டல் அமைந்திருந்தது.தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத் தான் கோபம் வராது. என்றாலும் பொறுத்தான்.ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை.

ஒரு நாள் அலுவலகம் விட்டு பைக்கில வந்து கொண்டிருந்தவன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள்.

இவனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள். நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. தான் சாருவிடம் சொல்லாமல் விடுவது தான் பிற்காலத்தில் எமனாய் அமையும் என்று எண்ணியிருக்க மாட்டான் தானே?

இவன் ஏன் சுதனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறான் என்று சாருவும் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் பாழாய் போன நட்பு அவள் கண்ணை மறைத்தது.வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விடவுமா வழித்துணையாய் வரும் சுதன் பெரிது????

நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன்.எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்து தீர்த்தாள்.

இப்படியிருக்க விதியும் விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாரா விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது போலிருந்தது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். ~அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான் தான|; என சாருவின் முன்னலேயே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான்.

காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன் வந்து பேய்க்காட்டிச் சிரித்தன. பெண்ணெல்லாம் பேய் என்று பாடத் தொடங்கினான் நரேன். அறிவுள்ளவன் என்றால் அந்த ஷீலா ஏமாற்றிப் போட்ட போதே திருந்தியிருக்க வேண்டுமே.ஆனால் அன்பு அன்பு என்று அலைந்து இறுதியில் நெஞ்சில் அம்பை வாங்கிக் கொள்ளும் நரேன் போல் எத்தனைப் பேர்????

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேனைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். இன்னும் என்னெனவோ சொன்னாள்;. விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா. உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றி விட்டதையும் கூறினாள்.புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறை தானும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது.

ம்ம்!!
இனியென்ன எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணிய போது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது.

சுவாசம் மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொனறை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!!

‘’’’’’’’

ஓயாத நினைவலைகள்;;;

என் உள்ளம் உள்ளுர அழுது கொண்டது

இத்தனை வருடங்களுக்குப் பிறகு டீச்சரை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். இன்று லீவு போடுமாறு கணவருக்கும் சொல்லி விட்டு உம்மாவையும் அழைத்துக்கொண்டு டீச்சரைப் பார்க்க புறப்பட்டோம்.

ஆனால்.......

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.....

எப்படியிருந்த டீச்சர்? இன்று இப்படி உருக்குலைந்து...??

பாடசாலை வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் போதெல்லாம் இந்த நசீமா டீச்சரின் ஞாபகம் வரத் தவறியதேயில்லை. ஏனோ அவர் மீது அளப்பரிய அன்பு எனக்கு. சின்ன வயதில் நான் படு சுட்டியாக இருந்தேன் என்று அடிக்கடி என் உம்மா கூறி சிரிப்பதுண்டு. டீச்சரும் என் குறும்புத் தனங்களை கூறி ~இவள் ரொம்ப பெரியாளா வரணும்| என்று துஆ கேட்டதும் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. உம்மாவின் உயிர்த் தோழியான ஆதிலா மாமியை விடவும் நசீமா டீச்சரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

நசீமா டீச்சர்!
நான் முதலாம் ஆண்டுக்கு செல்லும் போதே அவர் அங்கிருந்தார். எங்கள் ~பெரிய சேரின்| மனைவி தான் அவர். சேருக்கும் என் மீது ப்ரியம் அதிகம். மொண்டசரி போகும் போதும் உம்மா அந்த பாடசாலைக்கு என்னை கூட்டிச் சென்றிருப்பதால் பெரிய சேரை நானும் அறிந்திருந்தேன். அவர் எனக்கு சொக்கலேட் தராத நாட்களில் அவருடன் பேசாமல் வந்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு தான் வருகிறது.

அன்றும் அப்படித்தான். சேருடன் கதைத்துக் கொண்டிருந்த போது டீச்சர் வர,

~டீச்சர் கொஞ்சம் வெளியில போங்க சேருடன் தனியா பேசணும்;| என்றேன்.

கோபம் வந்திருக்காது தானே? சிரித்து விட்டு பேசாமல் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் டீச்சர். எனக்கோ கோபம் தலையுச்சிக்கு ஏறியது. மேசைக்கு முன்னால் சவாரசியமாக என் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த பெரிய சேரிடம்,

~சேர் இவங்கள வெளிய போக சொல்லுங்க| என முறையிட்டேன்.

சேரும் என்ன நினைத்தாரோ ~நசீமா டீச்சர் கொஞ்சம் அங்கால போங்க| என்று கதவிருந்த பக்கத்தை காட்டினார்.

எனக்கோ கொள்ளை சந்தோஷம். மழலை மொழியில் மிச்ச மீதியிருந்த கதைகளை சொல்லி விட்டு உம்மா படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்புக்கு ஓடி விட்டேன்.

அன்றிலிருந்து டீச்சர் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார். பல கதைகள் சொல்லித் தருவார். சக ஆசிரியைகளின் பிள்ளைகளுடன் அதிகம் பழகாத டீச்சர் ; வீட்டில் செய்து கொண்டு வரும் சிற்றுண்டிகளையும் தனிப்பட்ட முறையில் எனக்கு தருவார். ஸ்டாப் ரூமில் அனைத்து ஆசிரியைகளும் சாப்பிடும் போது என்னையும் உம்மா கூப்பிட்டுக் கொள்வார். அப்போதும் நான் நசீமா டீச்சர்; செய்து கொண்டு வந்த உணவுகளையே விரும்பி சாப்பிடுவதுண்டு.

கொஞ்சம் என் சுட்டித் தனங்கள் குறைந்தது தெரிந்த போது தான் உம்மா டீச்சரின் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு அவரது இரண்டு மகன் மார்; இருந்தார்கள். நளீர் நானா மீது தான் நான் அதிகமாக இரக்கம் வைத்திருந்தேன்.அவர் என்னை விட இரண்டு வயது மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர் .மற்றவர் காமில். அதிகம் பேச மாட்டார். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல சிரித்;;;;;;;தும் சிரிக்காமலும் சென்று விடுவார்.

; உம்மாவுக்கு அப்போது என் தம்பி பிறந்திருக்கவில்லை. அதனால் ஆண் பிள்ளையின் கனவை டீச்சரின் மகன் மாரிடம் நனவாக்கிக் கொண்டிருந்தார் உம்மா. டீச்சருக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் தான் நானா மார் இருவருக்கும் தங்கை என கூறி மகிழ்வார்.

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது டீச்சர் பென்ஷன் போயிருக்க வேண்டும். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சி;த்தியடைந்தவுடனேயே வேறு பாடசாலைக்கு போய் விட்டேன். அதன் பிறகு விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது டீச்சரின் தரிசனம் பெறாமல் போவதில்லை. நானும் சிறுமி என்ற ஸ்தானத்திலிருந்து ஒரு படி உயர்ந்திருந்ததால் எனக்கும் பெரிய சேருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி இருந்தது.

என் உம்மாவுக்கோ டீச்சருக்கோ நானும் நானாhமாரும் முன் போல் பழகுவதில் சங்கடங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் வாலிப வயதுடையவர்கள் என்பதால் எம்மிடையே வேரூன்றப் பட்ட சகோதர உறவு கூட ஒரு சிரிப்புடன் மாத்திரம் மட்டுப்பட்டு விட்டது..
காலச் சக்கரம் வேகமாக சுழன்றது. சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஊருக்கு வந்திருந்த போது நளீர் நானா வேலை கிடைத்து கொழும்புக்கு போயிருப்பதாய் சொன்னார்கள். காமில் ஏ எல் செய்து கொண்டிருந்தார். எனக்கு நல்ல வரன் அமைய வேண்டு;ம என்று தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவதாக டீச்சர் சொல்லும் போதெல்லாம் என் காதோரம் சிவத்துப் போகும்.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நானும் தற்போது திருமணம் செய்;து தலை நகரம் வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. என் திருமணத்துக்கும் டீச்சர் வரவில்லை;. ~என்னை பார்க்க வராமல் ஹொஸ்பிட்டலில் என்ன செய்தாராம்| என்று அழுதேன்.இதற்கிடையில் தான் டீச்சரும் குடும்ப சகிதம் மட்டக்குளியில் இருப்புது தெரிந்தது. நளீர் நானாவுக்கு இந்த டிசம்பரில் திருமணம் என்று கோல் பண்ணி உம்மாவிடம் சொல்லியிருக்கிறார் டீச்சர்.

உம்மா என்னைப் பார்க்க வந்திருந்த போது டீச்சரைப் பார்க்கச் செல்ல உத்தேசித்திருந்தோம்.
அதனடிப்படையில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் இடம் தேடியலைந்து வீட்டைக் கண்டு பிடித்து போது பெரியதொரு சாதனையை செய்து விட்டது போல இருந்தது.

போதாத குறைக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டீச்சர். அங்கு போய் டீச்சரைப் பார்த்த முதல் வினாடியே மனசை போட்டு பிசைவது போல வலியெடுத்தது. ஏன் வந்தோம் எனறெண்ணினேன். உம்மாவை விட வயது குறைந்த டீச்சர் முகம் வெளுத்து தலை நரைத்து வேறு யாரோ போல் இருந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முதல் டீச்சருக்கு இந்நோய் ஏறபட்டதாம் அதனால் தான் என் திருமணத்துக்கும் வரவில்லை என்ற போது என் முகத்தை வேறெங்காவது கொண்டு போய் வைக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தோன்றியது. நாம் வரும் மகிழ்ச்சியில் தான் இன்று இந்த அளவுக்காவது எழுந்து நடமாடுவதாக சேர் சொன்ன போது ஆனந்தம் பரவினாலும் சமையல்காரியின் உதவியுடன் எமக்காக அனைத்தும் தயாரித்ததை அறிந்த போது துடித்துப் போனேன். செல்லமாக கோபித்தேன்.

உம்மாவும் வெகுவாக கலங்கித்தான் போனார். உம்மாவுக்கும் டீச்சருக்கும் கூல்டிரிங்ஸ் கொடுப்பதற்காக டீச்சரின் அறைக்கு நுழைந்த போது, தாம் இளம் ஆசிரியைகளாக இருந்த போது பாடசாலையின் அபிவிருத்திக்காக பட்ட பாட்டை இருவருமாக கதையளந்து கொண்டிருந்தனர். நானாமாரும் வெளியில் போயிருந்ததால் பெரிய சேர் தான் என் கணவருக்கு பி;ஸ்கட் முதலியவற்றை கொடுத்துக் கொண்டிருந்;தார்.

நிறைய நேரம் உம்மாவையும் டீச்சரையும் பேச விட்டு நாம் முன் அறையில் இருந்தோம். வீட்டுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கவே டீச்சருக்கு தெரிவித்து விட்டு கை கால் அசைக்க முடியாமல் படுத்திருக்கும் அவரின் நலனுக்காக ப்ரார்த்தித்தவாறு வெளியே வந்தோம். பெரிய சேரின் கண்கள் கலங்கியதை காணத் தவறவில்லையாயினும் காட்டிக் கொள்ளவில்லை. கேட்டை விட்டு வெளியே வந்ததும் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீரை கணவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

(கொஞ்சம் கற்பனை)

அநாதையாகிப் போன ஆசைகள்

அவள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் கணவனது உள்ளம் குழுந்தைகளுக்காக ஏங்குவது கண்டு தலையாட்டினாள். நாளை காலை கேட்டு விட வேண்டியது தான் என திடசங்கற்பம் பூண்டவனாக உறங்கினான் தயாளன்;. அவன் கனவுகளில் எல்லாம் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட்டு, விளையாட்டுப் பொருட்களாய் வாங்கி அடுக்கி......

எத்தனை ஆசைகள்?
எத்தனை கற்பனைகள்?

நாளை நடக்கப் போவதை அவன் அறிந்திருக்க நியாயமில்லைத் தான்!!

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பிச்சைக்காரப் பெண்ணை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர்

அந்த பிஞ்சு முகம் இன்று நிர்ச்சலமாக இருந்தது. சதாவும் முகத்தை சுருக்கிக் கொண்டு சிணுங்கும் அந்த குழந்தை இன்று இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை எல்லோருமாக பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

குழந்தை அழவிலலை என்பதற்காக அதைப் போட்டு அடித்த அடியில் மூர்ச்சையாகி இறந்து போயிருந்ததே அந்தப் பிஞ்சு?

அவளின்;; முகத்தில் சிறிதும் சலனமிருக்கவில்லை. அவளைப் பார்க்கும் போது தாய் பாசம் என தரணியில் பேசப்படும் யாவும் பிழைத்துப் போனது போல் தோன்றிற்று. ஒரு வேளை..... அழுது களைத்து தூங்கிப் போனதோ என்னவோ?

தாயின் சேலையை சப்பிக் கொண்டும் அடம் பிடித்தழுது கொண்டும் வலம் வரும் அந்த குழந்தை.. தாயைப் போலவே எப்போதுமே கையை விரித்து பணம் கேட்டவாறு வரும் அந்த குழந்தை.. இப்படி பேச்சு மூச்சற்று கிடக்கிறதே!

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

அன்றும் அப்படித்தான். அவன் அலுவலகம் செல்வதற்காக வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அயன் களையாத ஷேர்ட், பேர்ப்யூம் வாசனை என அழகனாகச் செல்லும் அவன் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். கழிந்து போன இளமையின் நினைவுகளில் லயித்துப் போயிருந்த அவன் அக்குழந்தை அவனது தோற்பட்டையை தொடும் வரை சுய நினைவுக்கு வந்திருக்கவி;ல்லை. திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில்; அனல் தெரித்தது. இளையான்கள் மூக்கைச் சூழ்ந்திருக்க ஏதோ மிச்சம் மீதிகளை சாப்பிட்ட கையுடன் அவனைத் தொட்டதால் ஷேர்ட் எல்லாம் அழுக்காகியிருந்தது. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது அது உதைத்தால் நாம் மீண்டும் குழந்தையை உதைக்கிறோமா? இல்லையே. அது போல அவனும் அந்தரப்பட்டுப் போனான். ஒரு கணம் முறைத்துப் பார்த்தான். இவன் முறைக்கிறானா சிரிக்கிறானா என அந்த குழந்தை அறிந்திருக்குமோ என்னவோ.. அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது. அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது.

~~ ச்சீ பச்ச புள்ளய போய் கோவிச்சிக்கிறமே?||

அப்படித்தான் பாசம் வந்து கொட்டினாலும் தூக்கிக் கொஞ்சத்தான் முடியுமா? பஸ்ஸிலுள்ளவர்கள் இவனை வினோதமாக பார்க்க மாட்டார்களா? பேசாமல் திரும்பிக் கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தை அவனது நினைவுகளில் வந்து போனது. இரவு வேலை முடிந்து வீட்டுக்குப் போனான். வழக்கமாகவே அவன் போகும் நேரத்திற்கு அழுது கொண்டிருக்கும் மனைவி அன்றும் அழுது கொண்டு தானிருந்தாள்.
ஆண்டவா!
இந்த பிரச்சினைக்கு முடிவு எப்போது வருமோ?
சில வேளைகளில் நேரம் கெட்ட நேரத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்து கோபமும் வராமலில்லை. என்றாலும் இவளை சதாவும் குறை சொல்லும் அயல் வீட்டுப் பெண்களையும்; எத்தனை முறை கண்டித்தாயிற்று?? இவனிலும் அவளிலும்; எந்த குறையுமில்லை.ஏனோ ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை இவர்களுக்கு கொடுக்கவில்லை. இவளது தங்கையின் பிள்ளைகளை வாரியணைத்து இருவருமாக கொஞ்சும் போது அதைப் பார்ப்பவர்பளுக்கும் இயற்கை மீது கோபம் கோபமாய் வரும்.

அந்த குழந்தைக்கும் தனக்கும் ஏதோ ஓர் ப+ர்வீக பந்தமிருப்பாக இவனுக்கும் தோன்றும். கவனிப்பாரற்று கிடப்பதால் தானே இப்படி? ஒழுங்காக குளிப்பாட்டி அழகாய் உடுத்தினால்....?

இவன் ஆசைப்பட்டடு என்ன பயன்? மனைவியும் அம்மாவும் சம்மதிக்க வேண்டுமே?
அது சாத்தியப்படக் கூடிய ஒன்றா? பலவாறு சிந்தித்தான்.

தினமும் அழுது கொண்டே பஸ் ஏறும் அவளிடம் என்னவென்று போய் பேசுவது?

வாய்க்கு வந்தது போல அவள் ஏதாவது சொல்லி விட்டால்..
பெருத்த அவமானமாக போய் விடுமே.
சென்ற கிழமையில் கூட யாரோ ஒரு பெண் தன் பிள்ளைக்கு வைத்திருந்த பிஸ்கட்டை கொடுத்ததற்காக வசை பாடி தூற்றினாளே? அந்த பெண்ணின் முகம் வெட்கத்தால் எப்படி சிவந்திற்று? அப்பேர்ப்பட்ட இவளிடம் போய் ~உன் பிள்ளைளை தத்ததெடுக்கவா?|| என்றா கேட்க முடியும்?

இன்னொரு நாள்.......... வழக்கமாக அவள் அந்த குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அதை தட்டியெழுப்பினாள் அந்தத்தாய். பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு பெரும் ஆச்சரியமாய் போயிற்று. வேலையில்லாத நாட்களிலும் அவன் நேர காலத்துடன் எழும்;பினால் இன்னும் கொஞ்சம் தூங்கி எழுமாறு கூறும் இவனது அம்மா எங்கே தூங்கும் பச்சைப் பிள்ளையை எழுப்பி விடும் அவள் எங்கே? மீண்டும் கவனித்தான். குழந்தை மீண்டும் அவளது தோளில் அப்படியே சாயும் போது அவள் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். இவன் பார்ப்பதை காணவில்லை போலும். யாரும் அறியாத வண்ணம் குழந்தையின் தொடையில் கிள்ள................அது வீறிட்டு கதறி அழுதது. அவன் மலைத்துப் போனான். அழும் குழந்தையை காட்டி அவள் பணம் பெற்றுக் கொண்டிருந்தாள்.

வேலை விட்டு ஒரு தினம் வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டொபி மனதை என்னவோ செய்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இன்றிரவு மனைவியிடம் பேசி அவள் சம்மதம் பெற்று நாளைக்கு எப்படியாவது இந்த பிள்ளையை தனக்கு தர முடியுமா என கேட்டு விட வேண்டும். எனினும் ஒரு பிச்சைக்காரியின் பிள்ளை என்றால் யாரும் விரும்பப் போவதில்லை என்பதை நன்கறிவான். அதனால் தனது அலுவலக நண்பனுடைய தோழியின் பிள்ளை என கூறி சம்மதமும் வாங்கிக் கொண்டானே?

இதோ கொஞ்ச நேரத்தில் அவன் வந்து விடப் போகிறான். குழந்தை இறந்த செய்தி அறிந்தால் எப்படித் தாங்குவான்? மனைவியிடம் என்ன பதில் சொல்லுவான். எல்லாம் விதியின் விளையாட்டு என்பதை உணரவா போகிறான்?? அங்கே பொலீஸார் ஏதோ விசாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

( கற்பனை)

கனவுகள் உயிர் பெறும் நேரம்...

இளைய ராணிக்கு இன்று இருப்பு கொள்ளவில்லை....

வாழ்வு குறித்து தான் கண்ட கனவுகள் இன்றைக்கு பிறகு நிலைத்திருக்க வேண்டும் இறைவா! மானசீகமாக கடவுளை வேண்டினாள். இன்று அவர் வரப் போகிறார். வந்த பிறகு குளித்து சாப்பிட்டு குழந்தையை கொஞ்சும் அழகை அவள் இன்று தானே முதன் முதலாகப் பார்த்து ரசிக்க வேண்டும்??

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள்??

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்ததோ? எந்த ஜாதிமத பேதம் ஒழிய வேண்டும் என நினைத்தாளோ, அதே ஜாதிப் பிரச்சனை எந்தளவுக்கு விசுவரூபம்; எடுத்து தன்னையும் தன் கணவனையும் சுமார் ஏழு வருடங்கள் பிரித்து விட்டிருக்கிறதே? இத்தனை வருடங்களிலும் காமம் மிகுந்து திரியும் கயவர்களை சமாளிக்க எத்தனை போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது. தாலியிருந்தும் வேலியில்லாத பயிர் போல் தன்னைத் தானே எண்ணி அந்தரப்பட்டாளே. தத்தமது மனைவியருடனேயே வந்து பிள்ளையை தூக்கும் சாட்டில் இவள் மார்பை வருடும் எத்தனை பேர்? இளமை வாட்டத்தில் கணவனது படம்; பார்த்து எத்தனை இரவுகள் நெட்டி முறித்து படுத்திருப்பாள்?
எப்படி அவளால் இருக்க முடிந்ததோ?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

பெயருக்கேற்றாற் போல மிக இளமையாக இருந்த போது தான் பசு தோலுரிக்கப்பட்;ட மனிதர்களின் முகங்களை முழுமையாகக் கண்டு அதிர்ந்து போனாள். உலகத்தில் யாருமே பண்ணாத ஒன்றை அவள் செய்தாளா? இல்லையே.....ஆனால் உலகத்தில் அரங்கேறும் மிகப் பிரதானமான குற்றமும் இது தானா?

காதல்!!!

இந்த மந்திர வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணரு முன்பே காலம் அதன் கை வரிசையை எப்படியெல்லாம் காட்டிப் போயிற்று? அந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஊருக்குள்ளேயே எப்பேர்ப்பட்ட அவமானங்கள்? உண்மையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அவளுடைய காதலா? இல்லை.. காலம் தொட்டு பேசப்பட்டு வரும் ஜாதிகளுக்கிடையிலான வேறுபாடா?

பாடசாலை காலத்திலிருந்தே வாலிப்பான அவளது உடலமைப்பு மேல் மையல் கொண்டிருந்தவன் தான் அந்த சரவணன். காதலை காரணம் காட்டி அவளை அடையும் அவனது நோக்கம் புரியாதளவுக்கு இவளென்ன முட்டாளா? எக்காரணம் கொண்டும் அவனது காதலை ஏற்க அவள் தயாரில்லை. அதையும் விட அவளுக்குள் ஓர் எறும்பு சதாவும் ஓடி ஓடி உயிரை வதைத்துக் கொண்டிருந்ததே? மனசுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த காதல் புகையை மறைக்க அவளால் முடியாமல் போன போது சாடைமாடையாக குமரனிடம் ஒப்பேற்றினாள். அவன் வரும் போது நாணிச் சிவந்தாள். ஏ.எல் பரீட்சையில் தமிழ் பாடம் செய்த அவள் திருவள்ளுவர் கூறும் உயர்குடி, தாழ்குடி பற்றி அறிந்து வைத்திருந்தாள். ஒழுக்கம் ஒன்றே மனிதனை உயர் குடியில் சேர்த்து விடும் என்று அவள் கருதிக் கொண்டாள்.

ஆதி கால சமூகம் தொட்டு குலம் கோத்திரம் பார்த்து மக்கள் தங்களுக்குள் பிரிவினை பட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடிந்ததேயில்லை. ஒரே இறைவனின் படைப்பு, ஒரே நிற இரத்தம் இது தான் மனித இனம் என்று அவள் எண்ணினாள். வண்ணாண் அழுக்ககற்றி கழுவும் ஆடையை ஆடம்பரமாய் உடுத்தும் அவளது தந்தை, வீட்டு வாசலுக்குத் தானும் அவர்களை வர விடாது படலை வரை மட்டுமே அனுமதித்து காசு கொடுப்பதை பார்த்து மனம் வெதும்பியிருக்கிறாள். மா இடிக்க வருகிற ஆயாவையும் கொல்லைப் புறத்தில் நிற்க வைத்து வேலை வாங்குவதையும் பார்த்துப் பொறுக்காமல் பெற்றோரிடம் வினவியிருக்கிறாள். தமது இனங்களுக்கிடையிலேயே ஏன் இத்தகைய வேறுபாடுகள் என எதிர்வாதம் புரிந்து இருக்கிறாள்.

அப்போதெல்லாம் ~நீ சின்னப் பொண்ணு இதையெல்லாம் பேசப்படாது| என்று அதட்டப்பட்டாள். இயற்கையிலேலே இரக்க குணம் கொண்ட அவள் இப்படிப்பட்ட அரக்க குணங்களை அடியோடு வெறுத்தாள். அதன் காரணமாகவோ என்னவோ குமரனை விரும்பினாள். ஆனால் அவனோ தப்பித் தவறியேனும் அவள் பக்கம் பார்ப்பதேயில்லை. எதேச்சையாக கண்டு கொண்டாலும் கூட திரும்பிக் கொண்டு போய் விடுவான்.அப்போதெல்லாம் பச்சைப் புண்ணில் மிளகாய் பட்டது போல அவளது உள்ளம் துடிக்கும். எனினும் இளையராணி தளர்ந்து போய் வில்லை. புற்றீசல் போல் வெளிப்பட்ட அவள் காதல், குமரனின் இதயத்தில் புற்றை அமைக்க அவா கொண்டது.
காலம் அதன் பாட்டில் கடந்து கொண்டிருந்தது. நான்கு மாதங்களின் பின் அவளது முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் அவனது புன்னகை கிட்டியது. விட்டில் பூச்சி தானாய் வலிய வலம் வந்தால் எந்த விளக்கு தான் விரட்டியடிக்கும்?? என்றாலும் வேண்டுமென்று அவள் விழுந்து அல்லல் படுவதை குமரன் விரும்பவில்லை. பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவளும் அவன் தான் வேண்டும் என்று உறுதியாகவே நின்றாள்.

ஆறு மாதங்கள் ஆனந்தமாய்த் தான் கழிந்தன. அதற்குப் பிறகு தான் புயலடிக்கும் என்று யார் கண்டது?? இந்த விவகாரத்தை முதலில் எதிர்த்தவன் சரவணன் தான். குமரனை மிரட்டினான். அவளை இனி சந்திக்கவே கூடாது என்றான். ஆனால் இளையராணியின் அன்பு நதியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தவன் இவற்றையெல்லாம் துளியளவும் பொருட்படுத்தவில்லை. எதற்காகவும் இந்த காதல் ஜோடி அஞ்சவில்லை. தம் காதல் மூலமாகவேனும் சமூகத்தில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் ஒழிந்து போகட்டும்; அல்லது நம்முடன் சேர்ந்தே இந்த ஜாதிப்பிரச்சனைகள் அழிந்து சாகட்டும் என சபதம் எடுத்துக் கொண்டனர். எதிர்ப்புகள் காதலை மேலும் வலுவடையத்தானே செய்கின்றன. இவர்கள் தம் காதலில் இன்னும் உறுதியானார்கள்.

இது இளையராணியின் பெற்றோரின் காதுகளுக்கு கிட்டிய போது பதைபதைத்துப் போனார்கள். சமூக கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் என்றுமே விலகி நடந்ததில்லை. அப்படி ஏடாகூடமாய் எதுவும் நடந்தால் ஊர் தம்மை தள்ளி வைத்து விடுமே என பயந்தார்கள். முழு ஊருக்கும் தெரியு முன்பே இளைய ராணியையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணா தேசத்துக்கு ஓடி விட அவர்கள் முடிவெடுத்தார்கள். இருபது வருடமாய் வளத்த வளர்ப்புக்கு அவள் தேடித்தந்த வெகுமதியா இது?
ஒரே பெண் என்று எப்படியெல்லாம் பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள். அவளுக்கு குறை வைக்கக் கூடாதென்று இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூட அவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்தார்களே.......அத்தகைய அன்பிற்கு இந்த தண்டணை போதுமா?

எத்தனை பெற்றோர்கள் இன்று இந்த பாட்டைப் படுகிறார்கள்? காரணமென்ன காதலா? சாதிமத பேதமா?

அவளாவது யோசித்திருக்கலாமே? தன்னைக் கேட்காமல் படிக்க வைத்து, தன்னைக் கேட்காமல் சாப்பிடத் தந்து, தன்னைக் கேட்காமல் ஆடை அணிகலன் தந்த பெற்றோர் தனக்குத் தேவையான வயதில் வரன் தேடித்தராமல் இருப்பார்களா? காதல் இவ்வளவு வலிமையானதா?

எப்படியோ ஊரை விட்டு போகும் யோசனையை இளைய ராணியே நிறைவேற்றி விட்டாள். ஆம்! அவள் குமரனுடன் ஓடிப் போனாள். ஊரார்களுக்கு முன்னே நின்று தலைவிரி கோலமாய் அவளது அம்மா அவளை திட்டிக் கொண்டிருந்தாள். தான் பெற்ற பிள்ளையை ஒரு தாய் இப்படி திட்டுவாளா என்று ஊர் வம்பை அவல் தின்னும் பெண்களே மனம் கலங்கினர். ஆனால்.....அதன் உள்நோக்கம் மற்றவர்கள் திட்டுவதை விட தானே திட்டுவது போல நடித்தது தான் என்பது யாருக்குத் தெரியப் போகிறது?
இந்த சம்பவம் சரவணனை மிருகமாக்கி விட்டிருக்கும் என்று யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். சாதி வெறி பிடித்தலையும் ஒருவன் என்றே இளைய ராணி போன்றோர் நினைப்பார்கள். சமூக கட்டுப்பாடு மீறாதவன் என ஊரார் எண்ணுவார்கள்.தன்னை ஏமாற்றி விட்டு இன்னொருவனுடன் போய் விட்ட அந்த அவமானத்தை அவன் ஏற்றுக் கொள்ள திக்கித் திணறினான். நண்பர்களிடம் கேலிக்குரியவனானான்.

இவனைப் போன்றே அவள் மீது காதல் கொண்டவர்கள் ~அவங்களை சும்மா விடக் கூடாது| என கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் விட்டு வேடிக்கை பார்த்தனர்.

ஒரு குழுவாக இயங்கி அவர்களை தேடித்தருவதாக அவள் பெற்றோரிடம் வாக்களித்தனர். இனிமேலும் இந்த ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறக் கூடாதென்று மேடை அமைத்துப் பேசினர்.

எதுவுமே தெரியாமல் குமரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் இளையராணி.தாய் தகப்பனை விட்டு விட்டு வந்த சோகம் குடி கொண்டிருந்தாலும், குமரனின் அணைப்பில் அவளது கவலைகள் கட்டுப்பட்டிருந்தன. இல்லற வாழ்வின் இனிமை இத்தனை சுகமா என அவள் ஆனந்த ஏக்கம் கொண்டிருந்தாள்.அதற்கு கண் வைத்தாற் போலத் தான் இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் பேரிடியாக வந்தான் சரவணன். தான் மணமுடிக்க இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு வந்ததற்காக முதலில் வசை பாடினான். பிறகு கையோங்கினான். கீழ் சாதியான் தனக்கு பயப்படுவான் என்று எண்ணியே அவன் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். முதலில் செய்வதறியாமல் பின்னே நகர்ந்தான் குமரன். அதை கண்ட சரவணன்; உடனே அவளை நெருங்கி பிள்ளை வயிற்றுக்காரி என்று கூட பாராமல் சட்டையை பிய்த்து உதட்டோடு.................ச்சீ!!
ஆனால் ....காதல் தந்த தைரியம்....வெறி கொண்டவனாய் எழுந்து சரவணனை தாக்கினான் குமரன்;;;. இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்து போவான் என்று சரவணன் கூட எண்ணியிருப்பானா? ஒரு நிமிடத்துக்குள் தனக்கு நடக்கவிருந்த அட்டகாசத்தை எண்ணி உயிர் நடுங்கிய இளையராணியே குமரனின் வெறியைக் கண்டு ஆச்சரியப் பட்டாள். எல்லாவற்றிற்கும் அவள் தான் முதலில் அத்திவாரம் போடுவாள். அவன் திறமையாக கட்டி முடிப்பான். அவனாக ராகமிசைத்து அவளை வழிக்கு எடுப்பதில்லை. அப்படிப் பட்டவன் இவ்வாறு நடந்து கொண்டால் யாருக்குத்தான் ஆச்சரியமிருக்காது?

ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் ஆனந்தப் பட்டவளுக்கு தன் கண் முன்னே நொடிப் பொழுதில் அரங்கேறி விட்ட அந்த காட்சி....ஈரலை குளிரச் செய்தது.!

கடவுளே..

கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட அவள் கணவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான்
அருகில் சரவணண் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான்!!!

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


இன்று ஏழு வருடங்களின் பின் குமரன் விடுதலையாகி வருகிறான். சரவணனின் இரத்தத்தோடு ஜாதி வெறியும் அழிந்து போய் விட்டிருந்தது. காலம் காலமாக பொய்மைக்குள் வாழந்திருந்த சமூகம் விழித்துக் கொண்டு விட்டது. இளையராணியின் பெற்றோர் உட்பட குமரன் வீட்டாரும் சாதி



சனம் மறந்து அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

இன்று விடுதலையாகி வரும் அவனை அழைத்து வர, பாடசாலை போகிற தங்கள்; பிள்ளையையும் கூட்டிக் கொண்டு அவள் புறப்படுகிறாள். இன்று அவளது கனவுகள் உயிர் பெறப் போகின்றன.

(நிறைவு)